1. Home
  2. தமிழ்நாடு

இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா : நேரலையில் பார்ப்பது எப்படி..?

1

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக அயோத்தி நகரம் முழுவதும் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின்விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் குவிந்துள்ள பக்தர்கள் ராமர் பாடல்களை பாடி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரலை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்தந்த மொழிகளில் காலை 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது. டிடி நியூஸ், டிடி தமிழ், டிடி நேஷனல் ஆகிய சேனல்களில் நேரடி காட்சிகளை பார்க்கலாம்.

Trending News

Latest News

You May Like