அயோத்தி ராமர் கோவில் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் - ராமஜென்ம பூமி அறக்கட்டளை..!

அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.
நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம். இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.