1. Home
  2. தமிழ்நாடு

ரக்ஷா பந்தன் ஸ்பெஷல் : இந்த 14 மாவட்டங்களில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

1

சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி வடமாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு முதல் 31ஆம் தேதி நள்ளிரவு வரை மாநிலத்தில் உள்ள லக்னோ, கான்பூர், மீரட், பிரயாக்ராஜ், வாரணாசி, காசியாபாத், அலிகார், மொராதாபாத், ஜான்சி, பரேலி, கோரக்பூர், ஷாஜஹான்பூர், ஆக்ரா மற்றும் மதுரா-பிருந்தாவன் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதே போல உத்தரபிரதேச மாநிலத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகை இதுவரை பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூபாய் 1,250 மாதம் தோறும் வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையொட்டிய இந்த அறிவிப்புகள் அனைத்தும் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like