அதிமுகவிற்கு ராஜ்யசபா சீட்..? நயினார் நாகேந்திரன் பதில்..!

தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம். எம். அப்துல்லா, மற்றும் திமுக கூட்டணியைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர்ப் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.அதேபோல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரின் பதவிக் காலமும் வரும் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வரும், ஜூன் மாதம் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. இதற்காக ஜூன் மாதம் 02 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே மாதம்12 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்ப பெறப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவையில் நடைபெறும் முக்கிய மசோதாக்களில் வழக்கறிஞர் வில்சன் சட்டபூர்வமான விவாதங்களை முன்வைத்து வருகிறார். இதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக
எம்.எம்.அப்துல்லாவும், வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை மக்களவை உறுப்பினர்கள் இல்லை. இந்த நிலையில் மாநிலங்களவையில் அதிமுக பலத்தை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் பாஜக 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவையில் 2 இடங்களில் அதிமுகவிற்கு உள்ளது.
இதில் ஒரு இடத்தை பாஜகவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் சென்னையில் இன்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலங்களவை சீட் தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும். எங்களுடைய கூட்டணி அதிமுகவில் இருப்பதால் நிச்சயம் ஆதரவு அளிப்போம். இது குறித்து பாஜக தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி நடக்க உள்ளதாக கூறினார்.