ராஜீவ் காந்தியின் நினைவு தினம் : சென்னையில் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி..!

சென்னை முகப்பேரில் தென்சென்னை மேற்கு மாவட்ட, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவுன்சிலர் கே.வி திலகர் ஏற்பாட்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடைபெற்றது.
அதன் முடிவில் ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு தீவிரவாத ஒழிப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 20ஏ பேருந்து நிலையத்தில் இருந்து மாமன்ற உறுப்பினர் அலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை ஏந்தி அமைதி பேரணி நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கமிட்டி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.