1. Home
  2. தமிழ்நாடு

ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை..!உலக அளவில் இதுவரை 4 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிப்பு..!

1

உலக அளவில் இதுவரை 4 பேர் மட்டுமே ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் , இந்தியாவில் முதல் நோயாளியாக கண்டறியப்பட்ட 29 வயது கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.

கள்ளக்குறிச்சி சேர்ந்த 29 வயதான மணிமேகலைக்கு மூன்றாவது பிரசவத்திற்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கர்ப்பிணியான மணிமேகலைக்கு தைராய்டு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது .

மருத்துவ உலகில் பொதுவாக கழுத்துப் பகுதியில் ஏற்படும் தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சை செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் , பாதிக்கப்பட்ட கர்ப்பிணியான மணிமேகலைக்கு தைராய்டு கட்டி நெஞ்சுப் பகுதியில கண்டறியப்பட்டிருந்தது .

உலக அளவில் இதுவரை 4 நோயாளிகள் மட்டுமே ஹைப்பர் பரா தைராய்டு எனப்படும் அரிய வகை நோய் பாதிப்பிற்கு ஆளான நிலையில் , இந்தியாவில் முதல்முறையாக கர்ப்பிணி மணிமேகலைக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து மணிமேகலைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது .

அதில் எந்த ஒரு பலனும் எட்டப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மருத்துவர்களின் பரிந்துரைப்படி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் துறை தலைவர் தளபதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணான மணிமேகலைக்கு சிகிச்சைகள் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டது .

குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மணிமேகலையின் உயிரையும் வயிற்றில் வளரும் சிசுவின் உயிரையும் பத்திரமாக காப்பாற்ற எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையின் சார்பில் மூத்த மருத்துவர்கள் , அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் சார்பில் துரை ரீதியான மருத்துவர்கள் என குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது .

சம்பந்தப்பட்ட கர்ப்பிணி பெண் ஏற்கனவே இரண்டு முறை பிரசிவித்த நிலையில் முதல குழந்தை இறந்துவிட இரண்டாவது குழந்தையோ குறை மாதத்தில் பிறந்து தொடர்ந்து மருத்துவர்களால் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைக்கப்பட்டிருந்தது,தொடர்ந்து மூன்றாவது பிரசவமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழலும் இருந்தது.

குறைவான எடையுடன் மெலிந்து காணப்பட்ட பெண்ணுக்கு அதிகப்படியான கால்சியம்  சத்து காரணமாக தைராய்டு பாதிப்பு இருந்தது , வழக்கமான கழுத்துப் பகுதிக்கு மாற்றாக நெஞ்சுப் பகுதியில் இருந்த கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது .

இந்தியாவில் இதுவரை இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட வில்லை  என தெரிவிக்கும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்  இத்தகைய அறுவை சிகிச்சை மிக சவாலாக இருந்தது , குறிப்பாக சென்னையின் இரண்டு பிரதான மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் ஒருசேர குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார் .

தைராய்டுக்கு சிகிச்சை வழங்கிய அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த துறைத்தலைவர் மருத்துவர் தளபதி கூறுகையில் இந்த வகை சிகிச்சை இலவச காப்பீட்டு திட்ட மூலம் செய்யப்பட்டதாகவும் , இதுவரை யாருமே இந்த வகை அறுவை சிகிச்சை செய்திடாத நிலையில் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் வரை செலவாக வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.

சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையின் இயக்குனர் கலைவாணி கூறுகையில் அறுவை சிகிச்சைக்கு பின் கர்பிணி பெண் சிசுவுக்கு ஸ்கேன் செய்த போது குழந்தை நலமுடன் இருந்ததாகவும் கர்ப்ப காலத்தில் முதல் பருவத்திலோ அல்லது 3 வது பருவத்திலோ இத்தகைய சிகிச்சை மேற்கொண்டிருந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருந்தது , எனவே 2 வது பருவத்தை தேர்வு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதை விளக்கினார்.

பாதிக்கப்பட்ட மணிமேகலை கூறுகையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்ததாகவும் தன்னையும் சிசுவையும் பத்திரமாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார் , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை கைவிட்டு விட்ட நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு தனக்கு சிகிச்சை அளித்ததை குறிப்பிட்டார்

Trending News

Latest News

You May Like