ரஜினிகாந்தின் லால் சலாம் பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி..!!
செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த தனுஷின் 3 படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இசையமைப்பாளர் அனிருத் அறிமுகமானது அப்படத்தின் மூலம் தான். 3 படம் ஓரளவு வரவேற்பை பெற்றதற்கு அதன் பாடல்களே காரணம்.
கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்படி அவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் லால் சலாம்.
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கடந்த பிப். மாதம் வெளியான படம் 'லால் சலாம்'. இப்படத்தின் விஷுவல் எடிட்டராக இருந்தவர் பிரவீன் பாஸ்கர்.
இந்நிலையில், கேகே நகரில் இன்று (நவ.30) மளிகை பொருள் வாங்க சென்ற பிரவீன் பாஸ்கர், மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இன்று ஒரே நாளில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.