1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா போட்டியை காண குஜராத் செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!

1

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் விளையாடி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அக்டோபர் 14-ம் தேதி, அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இதையடுத்து நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. இந்த போட்டியை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 170-வது படப்பிடிப்பு கேரளா, நெல்லை ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்ல உள்ளார்.

Trending News

Latest News

You May Like