1. Home
  2. தமிழ்நாடு

'கூலி’ படத்திற்கான லுக் டெஸ்டில் ரஜினிகாந்த்..!

1

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்துடைய டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று கவனம் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

கூலி படத்திற்காக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக லோகேஷ் கனகராஜ் கதை எழுதி வருகிறார். விரைவில் இந்த படத்துடைய ஷூட்டிங் தொடங்க உள்ளது. கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இசை அமைப்பாளர் அனிருத் கூலி படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கூலி படத்திற்கான ரஜினிகாந்தின் லுக் டெஸ்ட் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு மீசை வெள்ளை தாடியுடன் வித்தியாசமான லுக்கில் ரஜினிகாந்த் உள்ளார்.

அதோடு "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like