ரஜினி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறாரா..? விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு
ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படத்தை பற்றிய பேச்சு தான் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. ரஜினி முன்னணி இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கப்போவதாக பரவலாக தகவல்கள் வந்தன.
தற்போது அந்த தகவலும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சுந்தர் சி சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அக்கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துப்போக தன் 173 பட இயக்குனராக சுந்தர் சியை ரஜினி தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
ரஜினி -சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் முதலில் தயாரிப்பார்கள் என தகவல்கள் வந்தது. வேல்ஸ் நிறுவனம் நீண்ட நாட்களாக ரஜினியை வைத்து படமெடுக்க முயற்சித்து வருவதாகவும், தற்போது ரஜினி -சுந்தர் சி படத்தை வேல்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது.மேலும் சுந்தர் சியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ சி சண்முகமும் வேல்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி ரஜினி -சுந்தர் சி திரைப்படத்தை இவர்கள் இருவரும் தயாரிக்க போவதில்லை என்றும், வேறொரு தயாரிப்பாளர் தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அநேகமாக இதுகுறித்து இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பையே அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.