1. Home
  2. தமிழ்நாடு

ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

1

ராமோஜி ராவ், சினிமாத்துறையின் மிகப்பெரிய பிலிம் சிட்டியான ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ஆவார். ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க் ஊடகத்துறையிலும் மிகப்பெரும் ஜாம்பவனாக விளங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம விபூஷண் விருது ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ்(87) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், டிடிவி தினகரன் ஆகியோர் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,"பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ராமோஜி குழுமத்தின் தொலைநோக்கு நிறுவனர். ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத்துறையில் அவரது பங்கு என்றும் நிலைத்து இருக்கும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த்: "எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர் 'ராமேஜி ராவ்', அவர் என் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like