1. Home
  2. தமிழ்நாடு

'இந்தியன் 2’ க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்..!

1

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் அ. வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டது. கமலும் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்துவிட்டார்.

கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்தியன். இந்தப் படத்தின் தொடர்ச்சி தான் இந்தியன் 2 என சொல்லப்படுகிறது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் 2 வெளியாகவிருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2ம் பாகத்திலும் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதியின் சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில்,நாளை நவம்பர் 3ம் தேதி இந்தியன் 2 இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை நாளை மாலை 5.30க்கு வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது 


 

Trending News

Latest News

You May Like