1. Home
  2. தமிழ்நாடு

எஸ்பிபியின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எஸ்பிபியின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!


பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், இன்று ரொம்ப சோகமான நாள், கடைசி நிமிடம் வரைக்கும் உயிருக்காக போராடிய எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்து விட்டார், அவரின் மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எஸ்பிபியின் பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள். எஸ்பிபியின் பாட்டை விட குரலை விட அவரை அதிகம் நேசித்தவர்கள் அதிகம். அதற்கு காரணம் அவரின் மனித நேயம் என கூறியுள்ளார்.

சிறியவர்கள், பெரியவர்கள் என்று பாராமல் எஸ்பிபி அனைவரையும் மதித்தார். இந்தியாவின் பல மொழிகளில் பாடும் சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு. அவரின் இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like