1. Home
  2. தமிழ்நாடு

விஜய் அரசியல் பயணம் : நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

1

நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்திருந்தார்.  தற்போது “The Greatest Of the All Time” படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படத்தின் படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார் விஜய். அதே சமயம் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திரைத்துறையினரும் பல்வேறு அமைப்புகளும் விஜயின் அரசியல் வருகைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.


 

Trending News

Latest News

You May Like