இளையராஜாவை வாழ்த்திய ரஜினி... சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை..!

தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.
'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை இன்று (மார்ச் 8) லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) March 8, 2025
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். #IncredibleIlaiyaraaja @ilaiyaraaja @Onemercuri @LiveNationUK