வாழை படத்தை வாழ்த்திய ரஜினிகாந்த்..!
மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தான் வாழை.
இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் " மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான. தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சப்பிடவில்லையே என்று கதறும் போது. நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) September 2, 2024
— Rajinikanth (@rajinikanth) September 2, 2024