"உரிய நேரத்தில் ரஜினி வெளியே வருவார்" அர்ஜூன் சம்பத் பேட்டி !

"ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியல் தான் உள்ளார். அவர் உரிய நேரத்தில் வெளியே வருவார்" என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து மக்கள் கட்சி தலைவர் மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். இதில், அவர் காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி அராஜகத்தை அரங்கேற்றி வருகிறது. தமிழகம் முழுக்க அவர்கள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். இந்து அமைப்பு நிர்வாகிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தமிழக மக்களிடம் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்தில் நல்லாட்சி விரும்புபவர்கள் அணி அணியாக வந்து பாஜகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, திமுக கூடாரம் தான் காலியாகி வருகிறது.
ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியல் தான் உள்ளார். தகுந்த நேரத்தில் அவர் வெளியே வருவார். ரஜினி வழி தனி வழி. யாருடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. தமிழகத்தில் ரஜினிக்கு என தனி செல்வாக்கு உள்ளது என்றார்.