அரசியல் அறிவிப்புக்கு நாள் குறித்த ரஜினி... திட்டம் இதுதான் !

அரசியல் அறிவிப்புக்கு நாள் குறித்த ரஜினி... திட்டம் இதுதான் !

அரசியல் அறிவிப்புக்கு நாள் குறித்த ரஜினி... திட்டம் இதுதான் !
X

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கெல்லாம் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மக்களிடம் எழுச்சி அலை உருவாகும்போது கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்று சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அவர் அறிவித்தார். மேலும் தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை எனவும் அறிவித்தார்.

இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என தகவல் பரவியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ரஜினி வீட்டிலேயே இருந்து வருகிறார். இதனால் எப்போது அவர் அரசியலுக்கு வருவார் என தெரியவில்லை.

எனினும், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான விஷயங்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சி தொடர்பான கொள்கைகள் அடங்கிய பிரச்சார வீடியோக்கள் தயாராக உள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி வரும் விஜயதசமி நாளில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பை வெளியிடுவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஜினிகாந்த் அரசியல் பயணம் குறித்து, நீண்டகாலமாக தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினி ஒருவேளை இந்த தேர்தலில் களம்கண்டால், 2021 தேர்தல் களம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.

newstm.in

Next Story
Share it