தீபாவளி முன்னிட்டு ரசிர்கர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினி..!

நாடு முழுவதும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி வாழ்த்துக்களால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழகின்றன. பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபத்திருநாளையொட்டி தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.
வழக்கமாக புத்தாண்டு, பொங்கல், மே தினம், தீபாவளி, ரஜினியின் பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வருவார்கள். அவர்களை சந்தித்து ரஜினிகாந்தும் வாழ்த்து கூறி மகிழ்வார். அந்தவகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது வேட்டி சட்டையுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ரசிகர்களுக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
தலைவர் தரிசனம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அவரது போயஸ் தோட்ட இல்லத்தில்...#Rajinikanth #ThalaivarNirandharam #superstarRajnikanth #JailerOnSunTV #Thalaivar170 #Thalaivar171 pic.twitter.com/EJxtQAINYJ
— SUNDAR MAHALINGAM (@mahalaingam) November 12, 2023