ராஜேந்திர பாலாஜி இந்த பேச்சுக்கு சிரிப்பு தான் என் பதில் : அண்ணாமலை நக்கல்..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை என 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும், யார் பிரதமர் என்பதை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யும் வகையில் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்.
சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது" என்று பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு சிரிப்புதான் என் பதில்" என்றார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், "இதெல்லாம் கேட்க கேட்க.. எங்களுக்கு எல்லாம் தலையே சுத்துகிறது" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.