1. Home
  2. தமிழ்நாடு

கைது நடவடிக்கையை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ராஜேந்திர பாலாஜி!!

கைது நடவடிக்கையை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ராஜேந்திர பாலாஜி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க முதலில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் 3 தனிப்படைகள் என 6 தனிப்படை போலீஸார் அவரை தேடிவருகின்றனர்.

கைது நடவடிக்கையை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ராஜேந்திர பாலாஜி!!

முன்னதாக அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தான் போலீஸ் அவரை தேடத் தொடங்கியது.

இதனிடையே ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொந்தரவு செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கைது நடவடிக்கையை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ராஜேந்திர பாலாஜி!!

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like