ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் – சொல்கிறார் அண்ணாமலை!!

ராஜேந்திர பாலாஜி தன்னை குற்றமற்றவர் என்று விரைவில் நிரூபிப்பார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலு நாச்சியாரின் 292 வது பிறந்த நாள் விழா, சிவகங்கையில் உள்ள மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம் என்று கூறினார்.
ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது என கேட்டுக் கொண்டார்.
டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த கேள்விக்கு, அவர் எங்கள் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், விரைவில் அவர் குற்றமற்றவர் என நீரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என்றார்.
newstm.in