ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இவர் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் தனது மகள் கனிமொழி எம்.பி. உடன் வசித்து வருகிறார். ராஜாத்தி அம்மாளுக்கு, வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே செரிமானக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதற்காக ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவரும் ராஜாத்தி அம்மாளுக்கு நேற்றிரவு பிரச்சினை தீவிரமாகியுள்ளது. இதனால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.