1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் ராஜஸ்தான் அணி பதிவிட்ட ரீல்ஸ்..! குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

1

ஐ.பி.எல். போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத் சன் ரைசர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை வரவேற்கும் விதமாகவும், ராஜஸ்தான் அணி கேப்டர் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த என்பதாலும் தமிழ்நாடு - கேரள மக்களை இணைக்கும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலுடன் எடிட் செய்து அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டது.

சமீபத்தில்தான் அந்த பாடலை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
 

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த பாடலை பயன்படுத்தியுள்ளதால் சிலர் இளையராஜாவை அந்த வீடியோவின் கமெண்ட்டில் டேக் செய்து வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like