1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை - ஆளுநர் மாளிகை..!

1

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. டிடி தமிழ் நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தவறு எடுத்து சொல்லப்பட்டது. தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. தவறு செய்தவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவுறுத்தல் என தகவல் வெளியாகி உள்ளது

சென்னையில் நடைபெற்ற டிடி தமிழ் தொலைக்காட்சியின் இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். முன்னதாக டிடி தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சி நடத்தப்படுவது பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் கடு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது பேசு பொருளாகி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் ரவி பங்கேற்ற இந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இருந்தது. அதில் ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வரி விடுபட்டு படப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. டிடி தமிழ் நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தவறு எடுத்து சொல்லப்பட்டது. தவறு செய்தவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவுறுத்தல் என தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like