1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் மழைநீர் கசிவு..!

1

மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில் கபே பரேடில் இருந்து ஆரே வரை 3 கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் (ஆரே முதல் பிகேசி) வரை பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் நவராத்திரி பரிசாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நொிசல் மிகுந்த நேரங்களில் 6 நிமிடங்கள் இடைவேளையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதர நேரங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மும்பை சாலைகள் ஆறு போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி புதிதாக தொடங்கி வைத்த அக்குவா லைன் மெட்ரோ பாதையில் உள்ள கலினா மெட்ரோ ரயில் நிலையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பை மெட்ரோ உள்கட்டமைப்புக்கு எடுத்து காட்டாக உள்ள அக்குவா லைன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கனமழைக்கு மழைநீர் கசிவு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனா்.


 

Trending News

Latest News

You May Like