முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது..!
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றுஅதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக பல தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முழங்கால் வரை தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வேளச்சேரியில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்குள்ள மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வீடு கோபாலபுரம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கியதால், கருணாநிதி வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்தது. தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை வைத்து இருந்தாலும் அதனையும் மீறி மழைநீர் உள்ளே சென்றது.