1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் 6 நாட்கள் மழை நீடிக்கும்: பிரதீப் ஜான்..!

Q

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது.

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12 முதல் 17 ஆம் தேதி வரை மழையின் தீவிர நிலை. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை இடைவெளி விட்டு விட்டு தினசரி மழை பெய்யும்.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை காலை இந்த பருவமழையின் 5ஆவது ரவுண்டு ஆட்டம் தொடங்கும். நாளை, நவம்பர் 12 ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டாவின் சில பகுதிகளிலும் மழை பெய்யும். பாண்டிச்சேரி, பெங்களூரிலும் மழை பெய்யக்கூடும்" என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like