இன்று இரவு 7 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.