இன்று முதல் 25 வரை தமிழகம், புதுச்சேரியில் மழை..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், இன்று முதல் 25ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, தமிழகத்தில் சில இடங்களில், நாளை வரை வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.