1. Home
  2. தமிழ்நாடு

ரயில்வேயில் வேலை : 9,970 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்கள்..!

1

இந்தியன் ரயில்வே இருக்கும் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 9,970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 362 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு
ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு 01.07.2205 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் எனவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 முதல் 8 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி என்ன?
  • ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்து குறிப்பிட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் (அல்லது) 10-ம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • 10-ம் வகுப்பு முடித்து மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல் ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் (அல்லது)
  • பல்வேறு பொறியியல் பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி
இப்பதவிக்கு A-1 மருத்துவ தரநிலையின்படி, நல்ல உடற்தகுதி, கண் பார்வை இருக்க வேண்டும்.

எவ்வளவு சம்பளம்?
ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு ரயில்வேயின் நிலை-2 கீழ் சம்பளம் வழங்கப்படும். தொடக்க சம்பளமாக ரூ.19,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இரண்டு கட்ட கணினி வழி தேர்வு நடத்தப்படும். முதல் கட்டத்தில் (CBT 1) தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு (CBT 2) தகுதி பெறுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கணினி வழி திறனறித் தேர்வு (CBAT) தேர்வு நடத்தப்படும். இத்ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்விற்கு ஆன்லைன் விண்ணப்பம் உத்தேசமாக ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை மண்டல ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 செலுத்தினால் போதும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 13.05.2025

விண்ணப்பதார்கள் அவர்களின் ஆதார் எண்ணின் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி, ஆதார் எண் விவரங்களுடன் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like