1. Home
  2. தமிழ்நாடு

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

1

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு குறிப்பிட்ட ஊழியர்களுக்குத் தீபாவளி சமயத்தில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.   இதனால் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் போனஸால் பயன்பெறுவர். 

மத்திய அரசின் இந்த முடிவு மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும். தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த தொகை ரயில்வேயில் பணியாற்றும் பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதாவது, ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும்.தகுதியுடைய ஒவ்வொரு பணியாளரும் 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 பெறுவார்கள்.கடந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது.

போனஸ் தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி ரயில்வேயில் 58 ஆயிரத்து 642 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like