லோகோ பைலட் அஜாக்கிரதையால் ரயில்வே ஊழியர் பரிதாப பலி!
பீகாரில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
இரு ரயில்களுக்கு இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி செலுத்தாமல் பின்னோக்கி திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு லோகோ பைலட் கீழே இறங்கி ஓடியதாகவும், இன்ஜினை மாற்றவோ, விபத்தை தடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.