தவறி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட ரயில்வே காவலர்..!
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயிலை பிடிக்க மாற்றுத்திறனாளி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது அவர் நிலைதடுமாறி நடைமேடையில் தவறி விழுந்தார். இதனிடையே நடைமேடையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மாற்றுத்திறனாளியை மீட்டுள்ளார்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. காவலர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு சூழல் நிலவியது.