1. Home
  2. தமிழ்நாடு

கட்டும்போதே இடிந்த ரயில்வே பாலம்; இந்தியாவில் 26 பேர் பலி..!

1

மிசோரம் மாநிலத்தில் சாய்ராங் என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 26 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தச் சம்பவம் பற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் சோரம்தங்கா எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த இடத்தில் 40 ஊழியர்கள் வேலை பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 28 பேர் தான் அங்கு இருந்ததாகக் காவல்துறை கூறியது.

மீட்புப் பணியினர் 17 உடல்களை மீட்டதாகவும் இதர உடல்களை மீட்க பணிகள் தொடர்வதாகவும் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறினார்.

இதனிடையே, இந்த விபத்து தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட வடகிழக்கு ரயில்வே நிர்வாகம், பைராபி-சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் குறுக்கே 104 மீட்டர் உயரத்தில் அந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்தது.

அந்தப் பாலம் மிசோரம் மாநிலத்தை நாட்டின் எஞ்சிய பகுதிகளுடன் இணைப்பதற்கு முக்கியமான வழி என்றும் அது கூறியது.

விபத்து பற்றி விசாரணை நடத்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அது தெரிவித்தது.

Trending News

Latest News

You May Like