3வது நாளாக தொடரும் ரெய்டு!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதேபோல் அவல்பூந்துறை பகுதியில் உள்ள என்.ராமலிங்கத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும், இவருக்குச் சொந்தமான அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.
இந்த 3 இடங்களிலும் நேற்று முன்தினம் இரவுவரை சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி. நிறுவன உரிமையாளர் செல்வசுந்தரம் வீட்டிலும் அதிகாரிகளின் சோதனை நடந்தது. 2-வது நாளாக நேற்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் அலுவலத்தில் சோதனை நடைபெறுகிறது.
கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாகச் சோதனை நடைபெற்று வருகிறது.