பிரபல தமிழ் நடிகை வீட்டில் திடீர் ரெய்டு..!
பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின்பேரில் நடிகை அருணா வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் சென்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அருணா வீட்டில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அருணாவின் கணவர் செய்யும் தொழில் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை அருணா சிவப்புமல்லி, நீதி பிழைத்தது, ஆடி வெள்ளி உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.