1. Home
  2. தமிழ்நாடு

ராகுல் பிரதமராக மாட்டார்... உதயநிதி முதல்வராக மாட்டார் - அமித்ஷா அதிரடி பேச்சு!

1

நெல்லையில் பாஜகவின் குமரி மண்டல் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். மேலும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை; எம்எல்ஏக்கள் எம்ஆர் காந்தி, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், திமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்து கட்சியில் இருந்து விலகிய கே.எஸ். ராதாகிருஷ்ணன் தற்போது அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார். 

இந்நிகழ்வில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை மிக உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னிறுத்திய பிரதமருக்கும் பாஜக தேசிய தலைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதியாக இந்த மண்ணைத் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் போகிறார் என்ற மகிழ்ச்சியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் முதல் முதலில் தமிழகத்தின் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்தோம்.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களை மதிக்கக் கூடியவராக இருந்து வருகிறார். தமிழ் மண், மக்கள் பண்பாடு ஆகியவை பாதுகாத்து கொண்டாடும் வகையில் தஞ்சை ராஜேந்திர சோழனுக்கு  மாபெரும் விழா எடுத்து கௌரவப்படுத்தியவர் பிரதமர் மோடி. காசி தமிழ் சங்கம் என்ற நிகழ்வு ஆண்டாண்டாக நடைபெற்று சௌராஷ்ட்ரா தமிழ் சங்க விழா நடத்தப்பட்டு வருகிறது, தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அழகுச் சேர்த்துள்ளார்.

மதத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான நிகழ்வு பகல்காமில் நடந்தது. வேரோடு தீவிரவாதிகளை அளிக்கும் வகையில் வீடு புகுந்து அவர்களை தாக்கி ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் பிரதமர் சாதனை படைத்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து காட்டியுள்ளார் பிரதமர் மோடி. ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகள் கண்டறிந்து அழிக்கப்பட்டார்கள்.

திருவள்ளுவரின் குறள் வழி நின்று பிரதமர் ஆட்சி நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் மிக முக்கிய சட்டமன்ற நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் முதல்வர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு சென்றுவிட்டால், பதவியை இழக்க நேரிடும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்கலாமா?. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார், இதனை கருப்பு சட்டம் என திமுக தலைவர் சொல்கிறார், அதனை சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

வருங்காலத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தேசிய ஜனநாயக ஆட்சி தான் அமைய உள்ளது. இந்திய நாட்டில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி என்பது திமுக ஆட்சி தான். திமுக ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறது. திமுக அரசு ஊழல் பட்டியல் என்பது நீளமாக உள்ளது. டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என பல ஊழல்களை திமுக அரசு செய்து வருகிறது. வேலை கொடுப்பதற்கு பணம் வாங்கிக் கொண்டு ஊழலை திமுக செய்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அரசியல் கூட்டணி அல்ல, தமிழகத்தை மேன்மை அடைய செய்து வளர்ச்சி அடையச் செய்து முன்னேற்றத்திற்கான கூட்டணியாக அமைந்துள்ளது. பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை குவித்து வருகிறது. நாடு முழுவதும் இந்த வெற்றியை குவிப்பதற்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை காரணம்.

வரும் 8 மாத காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் தெருமுனை கூட்டத்தை நடத்த வேண்டும், வீடு வீடாக செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எவ்வாறு பயன்பெறும் என்பதை விளக்கி வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like