1. Home
  2. தமிழ்நாடு

ஏப்.12-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..!

1

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். அந்த வகையில் பிரச்சாரத்துக்காக முதலில் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் ராகுல் காந்தி கோவை மற்றும் நெல்லை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like