1. Home
  2. தமிழ்நாடு

7 ரூபாய் சம்பள உயர்வு கொடுத்த பிரதமர் : மோடியை கலைக்கும் ராகுல் காந்தி..!

1

கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் மாறும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தினசரி ஊதிய தொகையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 294 ஆக இருந்த தினசரி ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பின்படி வரும் நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதியம் ரூபாய் 319 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுல் காந்தி தனது தளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், பிரதமர் சம்பளத்தை ரூபாய் ஏழு உயர்த்தியுள்ளதாகவும், இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்வீர்கள் என்று பிரதமர் கேட்க கூடும் என்றும் பதிவு செய்துள்ளார். அதே சமயம், இந்த ஊதிய உயர்வை வைத்து, 700 கோடி ரூபாய் செலவு செய்து, பிரதமருக்கு மக்கள் நன்றி சொல்வது போன்று பாஜக விளம்பரங்கள் செய்யும் என்றும் ராகுல் சாடினார்.மேலும் இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு நாட்டில் அமைந்த முதல் நாள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் தினசரி கூலி ரூபாய் 400 ஆக உயர்த்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like