அமெரிக்கா செல்கிறார் ராகுல்: எதற்காக தெரியுமா?
காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறியதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான பிறகு ராகுலை சந்திக்க வேண்டும் என இந்திய வம்சாவளியினர், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் சர்வதேச மீடியாக்கள் கோரிக்கை விடுத்தனர். அவருடன் கலந்துரையாடவும் விருப்பம் தெரிவித்தனர்.
பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் அமெரிக்கா வருகிறார். 8 ம் தேதி டல்லாசிற்கும், 9 மற்றும் 10 ம் தேதி வாஷிங்டன்னிற்கும் வருகிறார். டல்லாஸ் நகரில், டெக்சாஸ் பல்கலை மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு விருந்திலும் கலந்து கொள்கிறார். வாஷிங்டன்னிலும் இதேபோன்று நிகழ்ச்சிகளிலும் ராகுல் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.