1. Home
  2. தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி..!

1

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிசோரமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லால் தன்ஹாவ்லாவைச் சந்திக்க இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து, பயணம் மேற்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது 

முன்னதாக, சன்மாரி முதல் ராஜ்பவன் வரை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி எம்.பி., தமது பாதயாத்திரை இந்தியாவின் பன்முகத்தன்மைக் கொண்டதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவின் பன்முகத்தன்மையை பா.ஜ.க. அளித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் மணிப்பூரில் செய்தது போல், மிசோராமில் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளனர்.

ராகுல் காந்தியின் மிசோரம் வருகைக்கு பின்னர், காங்கிரஸ் கட்சி 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய கூட்டணி 37.8% வாக்குகளுடன் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பா.ஜ.க. 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன.

Trending News

Latest News

You May Like