1. Home
  2. தமிழ்நாடு

ராகுல் காந்தியிடம் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்போ... காரோ...இல்லை..!

Q

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியிலும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி.

மனு தாக்கல் செய்தபோது, வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள சொத்துகள் விவரம்:

ரூ.4.33 கோடி மதிப்பிலான பங்குகள், ரூ.3.81 கோடி மதிப்பிலான பரஸ்பர நிதி பங்குகள், ரூ.26.25 லட்சம் வங்கி கையிருப்பு, ரூ.15.21 லட்சம் தங்கப் பத்திரங்கள் உள்பட ரூ.9,24,59,264 மதிப்புள்ள அசையும் சொத்துகள் அவருக்கு உள்ளன. மேலும் தற்போதைய மதிப்பில் ரூ.11,15,02,598 மதிப்புள்ள அசையா சொத்துகள் அவருக்கு உள்ளன.

இதுதவிர தன்னிடம் கையிருப்பாக ரூ.55 ஆயிரம் இருப்பதாகவும், ரூ.49 லட்சத்து 79 ஆயிரத்து 184 கடன் இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

மேலும் தன்னிடம் 333.3 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் காரோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like