#BREAKING : ராகுல் காந்தி முன்னிலை! மோடி பின்னடைவு..!
வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயிடம் பின்னடைவை சந்தித்து வருகிறார். அஜய் ராய், மோடியை விட 6000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் பாஜகவை விட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக வெறும் 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.