1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கிய ராகுல்காந்தி!

Q

‘வெள்ளை டி-சர்ட் இயக்கம்’ தொடங்குவதாகத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அறிவித்தார். அதில் அவர் பேசிய வீடியோவும் இடம்பெற்றது. அதில், ராகுல்காந்தி கூறியிருப்பதாவது,
இன்று ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மோடி அரசு கண்டுகொள்வதில்லை. குறிப்பிட்ட சில பெருமுதலாளிகளை மேலும் வளப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது.
இதனால், ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. தங்கள் ரத்தம் மற்றும் வியர்வையால் நாட்டை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமை மோசமாகி வருகிறது. அவர்கள் பல்வேறு வகையான அநீதி மற்றும் அராஜகங்களை தாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு நீதியும், உரிமைகளும் கிடைக்க வலிமையாகக் குரல் எழுப்புவது நம் அனைவரது பொறுப்பு. இந்தச் சிந்தனையுடன், ‘வெள்ளை டி-சர்ட் இயக்கம்’ தொடங்கி உள்ளோம். இதில் திரளாகச் சேருமாறு இளைஞர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார நீதியில் நம்பிக்கை இருந்தால், வெள்ளை டி-சர்ட் அணிந்து, இயக்கத்தில் பங்கு பெறுங்கள்.
இதில் இணையவும், விரிவான தகவல்களைப் பெறவும் இணையதளத்தை அணுகலாம் அல்லது ‘9999812024’ என்ற எண்ணுக்கு ‘மிஸ்டுகால்’ கொடுக்கலாம்.

Trending News

Latest News

You May Like