1. Home
  2. தமிழ்நாடு

7 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

1

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நீட் தேர்வை தொடர்ந்து யூஜிசி நெட் தேர்வுகளின் வினாத் தாள் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது ராஜஸ்தான் மாநில மாணவர்கள் நீட் போன்ற பல தேர்வுகளில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்தனர். இது போன்ற முறைகேட்டால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன; குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற முறைகேடுகள் அதிகம் நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “கடந்த 7 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 கோடிக்கு மேல் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். கல்வி அமைப்பை பாஜகவின் தாய் அமைப்பு கைப்பற்றியுள்ளதே வினாத் தாள் கசிவுக்கு காரணம்.

ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்துவார் என்று கூறுகிறார்கள். ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் வினாத் தாள் கசிவை தடுத்து நிறுத்த முடியவில்லை அல்லது நிறுத்த விரும்பவில்லை. ஆர்எஸ்எஸும் பாஜகவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன.

மற்ற அரசு அமைப்புகளை எப்படி பாஜகவினர் கைப்பற்றியுள்ளனரோ அதேபோல கல்வி நிறுவனங்களையும் அதன் அமைப்புகளையும் கைப்பற்றி வைத்துள்ளனர். துணைவேந்தர்கள் தொடங்கி முக்கிய அதிகாரிகள் வரை பாஜகவை சேர்ந்தவர்கள் அல்லது ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதன் மூலம் இதை பாஜக செய்துள்ளது. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு மீது நரேந்திர மோடி எப்படி தாக்குதல் நடத்தினாரோ அதேபோல வினாத்தாள் கசிவு மூலம் தற்போது கல்வி முறையிலும் தாக்குதல் நடத்தியுள்ளார்.” என்று குற்றம்சாட்டினார்.

Trending News

Latest News

You May Like