1. Home
  2. தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அரசு முறையாக நடத்தாது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

1

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், இரண்டு கட்டங்களாக வரும் 2027 மார்ச் 1ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை சரியாக நடத்தாது என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது. அவ்வாறு நடத்தினால் அவர்களது அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ச்சியாக தீவிரமாக போராடி வருகிறேன்.

எதிர்காலத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை நீக்குவோம். அது பீஹாரில் இருந்து தொடங்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு பொறுத்தவரை ஓபிசி, தலித், பழங்குடியின சமூக மக்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு இல்லாமல், கணக்கெடுப்பு படிவங்கள் இறுதி செய்யப்பட்டால் முறையான கணக்கெடுப்பாக இருக்காது" என்றும் அவர் தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "2027 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரையறை அடிப்படையில் ஒன்றிய அரசு மேற்கொண்டால் தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like