1. Home
  2. தமிழ்நாடு

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்!

1

ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். 

38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஃபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

Rafael Nadal

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ரஃபேல் நடால் வெளியிட்டுள்ளார். அதில், “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்கதான் செய்ய வேண்டும்,  இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது.

இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாடவுள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா,  என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்” என மிக உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


முன்னதாக தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தி இருந்தார். நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார். 63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற பல்வேறு சாதனைகளை ரஃபேல் நடால் தக்கவைத்துள்ளார். 

Trending News

Latest News

You May Like