1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராதிகா..!

1

பா.ஜ.க.வுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பா.ஜ.க. சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, 

வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழகத்திற்கு வர நாங்கள் பாடுபடுவோம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி. ஆக்குவேன். 

காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like