1. Home
  2. தமிழ்நாடு

அமுலுக்கு வந்த குற்றவியல் சட்டங்களை வரவேற்ற ராஷி கன்னா!

1

இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பாா், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ராஷிகன்னா சமூக விஷயங்களிலும் ஆர்வம் காட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு மரண தண்டனையும், பெண்களை பலாத்காரம் செய்வோருக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கும். இந்த சட்டங்களுக்கு நடிகை ராஷிகன்னா வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்று அவர் தெரிவித்து உள்ளார். ராஷிகன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

Trending News

Latest News

You May Like